(தி.மு) திருமணத்திற்கு முன்

(நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்

அவன் : ஆமாம்இ இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

அவள்   : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன்   : இல்லைஇ இல்லைஇ நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள்    : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன்    : ஆமாம்இ இன்றும்இ என்றென்றும்

அவள்     : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன்     : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள்     : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன்     : கண்டிப்பாகஇ அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள்     : என்னை திட்டுவாயா ?

அவன்     : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா

அவள்    : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின்

கீழிருந்து மேலே படியுங்கள்

பார்த்ததில் பிடித்தது


புலம்பெயர் வாழ்வே புண்ணானதால் பூத்த பொன்மொழிகள்

controverseஎதிரி நண்பன் ஆனால் ஆபத்து
நண்பன் எதிரி ஆனால் பேராபத்து

நல்ல நட்பு தூர இருந்தாலும் கிட்ட இருப்பது போல் இருக்கும்
கெட்ட நட்பு கிட்ட இருந்தாலும் தூர இருப்பது போல் இருக்கும்

வேலையின்றி வாழ்ந்த போது சேர்ந்த நட்பு
வேலை கிடைத்தபின் சோர்ந்த நட்பு

சொல்பவர்கள் எல்லாம், செய்பவர்கள் அல்ல
செய்பவர்கள் எல்லாம் சொல்பவர்கள் அல்ல.
சொல்லி விட்டு சொல்லவில்லை எனபவர்கள் நல்லவர்கள் அல்ல

படித்ததில் பிடித்தது


நேரு சொன்னார்:
சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி..

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..

இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா???…
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா???

——————————————————————————————————————–
நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!

——————————————————————————————————————–
ஒன்றுமே தெரியாத student கிட்ட question paper கொடுக்குறாங்க….
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட answer paper கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது????….

——————————————————————————————————————–
ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப்
புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது…

——————————————————————————————————————–
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான் ஐயா.
——————————————————————————————————————–
நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…
சொல்லட்டுமா????
ஆ..சொல்லட்டுமா????

பக்கத்து “பெருமாள் கோவில்”ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….

பனங்காய் பணியாரம்

புலம் பெயர்ந்தவர் நாங்களடா


புலம் பெயர்ந்தவர் நாங்களடா
இங்கு புலம்பி வாழ்வதும் நாங்களடா
மனம் விட்டு கதைப்பவாள் இல்லையடா – இங்கு
போக விட்டு சிரிப்பவர் தொல்லையடா

இருக்கும் போது சிரிக்கின்றார்
இல்லையென்றால் அழுகின்றார்
ஓடி ஓடி உழைக்கின்றார்
உண்மைகள் தன்னை மறைக்கின்றார்

தன்னைத் தானே புகழ்கின்றார்
பகட்டு வாழ்கை வாழ்கின்றார்
உறவுகள் தன்னை மறக்கின்றார்
நாடுகள் மாறி அலைகின்றார்

படித்தவன் போலே நடிக்கின்றார்
படைத்தவர் போலே வாழ்கின்றார்
கொடுத்தவான் கேட்டால் முறைக்கின்றார்
பண்பற்ற கதைகள் கதைக்கின்றார்

படைத்ததை எல்லாம் அழிக்கின்றார்
படித்ததை எல்லாம் கிழிக்கின்றார்
சிந்தனனை இன்றி முழிக்கின்றார்
தாய் மொழி தன்னை மறக்கின்றார்

——
தனக்காக வாழ்ந்தால் நேரம் போகாது
பிறருக்காக வாழ்ந்தால் நேரம் போதாது

தத்துவ வரிகள்

கிராமத்து பெண்ணின் முகத்தில் புன்நகை
நகரத்து பெண்ணின் கழுத்தில் நகை

சேற்றில் நின்று நாற்று நடும்
கிராமத்து பெண்களின் பாட்டில் சேறில்லை

பசுவின் மடியில் கொசு கடித்தாலும் அது குடிப்பது பாலையல்ல
அதன் இரத்தத்தை

கோவிலில்லா ஊரில் குடியிருக்காதே
குடியிருக்கும் இடத்தில் அல்லவா கோவில் இருக்கிறது

நிலத்தில் வாழ் நம்மவர் முகத்தில் அவலங்கள்
புலத்தில் வாழ் எம்மவர் முகத்தில் அலங்காரங்கள்

நான் சிரித்த போது சிரிக்காத நட்புக்கள்
நான் அழுத போது சிரிக்கின்றது


அப்பவும் இப்பவும்

சோமண்ணை: தமிழ் ரேடியோ, தமிழ் ரீவீ பார்க்கக் கேக்க முடியவில்லை
ஏனென்றால் வாடகை வீட்டில் சட்லைட் பூட்டமுடியாது

கந்தப்பு: இப்ப நிலத்தோடு வீடு கட்டி சட்லைட் பூட்டியும் ரேடியோ,
ரீவீ பார்க்கக் கேக்க முடியவில்லை, வீட்டு கடன் அடைக்க ஓடியோடி
இரண்டு வேலை செய்வதால். பார்க்க கேக்க நேரமில்லை

சோமண்ணை: !?!??!?

பெயரில் நேசம் = செயலில் மோசம்
நேசப்பார்வை அது மோசப்பார்வை
நேசக்கரம் அது மோசக்கரம்
நேச நாடு அது மோசநாடு

—————-

சோமண்ணை: கோவிலில் களவு போய்விட்டது என்று கேள்விப்பட்டவுடன்
கோவில் தர்மகத்தா பெரிய சந்தோஷத்தில் இருக்கிறார்.

கந்தப்பு: கவைலைப்படாமல் ஏன் சந்தோஷப்படுகிறார்?

சோமண்ணை: தான் அடிச்சதும், திருடன்பெயரில் போட்டாச்சு என்று தான்

கந்தப்பு: !?!?!?

——————

கந்தப்பு: திருட்டுச்சின்னத்துரை ஆன்மீகவாதியாக மாறிவிட்டான்

சோமண்ணை: எதை வைச்சு அப்படி சொல்லுகிறாய்?

கந்தப்பு: இப்ப கோவிலில் மட்டும் தான் திருடுகிறான்

சோமண்ணை: !?!?!?!

———-
கூட்டு – சீட்டு

நிலத்தில் வாழந்த போது கூட்டுக்குடும்பம்
புலத்தில் வாழும்போது சீட்டுக்குடும்பம்
கூறல்சீட்டில் கழிவு அதிகம்
நகைச்சீட்டில் சேதாரம் அதிகம்

மாறாது மாறாது ஒரு போதும் மாறாது


நம்மவர் கண்ணுக்கு நல்லவைகள் தெரியாது
எம்மவர் மனதுக்கு நன்மைகள் புரியாது
அவரவர் முகங்களிலே புன்னகையே கிடையாது
அந்தந்த சிரிப்புக்கு அர்த்தமே புரியாது
பேசுகின்ற வார்த்தையிலே விபரங்கள் இருக்காது
தாயகத்து நிகழ்வுகளில் நாட்டமே கிடையாது
எம்மவரின் பண்பாடு நம்மவர்க்கே புரியாது
எமக்குள்ள வேற்றுமைகள் ஒருபோதும் ஒழியாது
போகவிட்டு புறஞ்சொல்லல் ஒருநாளும் போகாது
ஓரிடத்தில் ஒழுங்காக வாழ்ந்ததுவும் கிடையாது
வந்தவரை வரவேற்க்கும் பண்புதனும் கிடையாது
பணம்சேர்க்கும் படலங்கள் நம்மைவிட்டு போகாது
பலகோடி கொடுத்தாலும் அதுகூடப் போகாது
நன்மை பல செய்தாலும் நன்றியே கிடையாது
தாய்மொழியை பேசுகின்ற நோக்கமே வராது
பொதுநலம் என்னவென்று ஒருவருக்கும் தெரியாது
எம்மினத்தை விட்டுவிட்டு இக்குணங்கள் மாறாது
மாறாது மாறாது ஒருபோதும் மாறாது
எம்மினம் என்னவென்று எம்மவர்கே புரியாது
தெரியாது, புரியாது இதுவொன்றும் மாறாது
மாறாது மாறாது என்றென்றும் மாறாது
சுடுகாடு போனாலும் சுட்டெரிந்து போனாலும்
இக்குணங்கள் எம்மைவிட்டு ஒருபோதும் மாறாது
மாறாது மாறாது ஒருபோதும் மாறாது

விஸ்கி

drunkenகந்தப்பு: வர, வர உடம்பு வீக்காய் போச்சு

சோமண்ணை: ஏன்?

கந்தப்பு: முன்பு ஒரு போத்தல் விஸ்கி
குடித்தாலும் அசையமாட்டன்

சோமண்ணை: அப்ப இப்ப?

கந்தப்பு: வெறும் விஸ்கி போத்தலை
கண்டவுடனேயே ஆட்டம் துவங்கி விடுகிது

சோமண்ணை: !?!?!?


Counter