படித்ததில் பிடித்தது
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 05/03/2010 10:45 am by Ravi Chellathuray
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா???…
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா???
——————————————————————————————————————–
நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???
உடனடியா பதில்
தேவை……!!!!
——————————————————————————————————————–
ஒன்றுமே தெரியாத student கிட்ட question paper கொடுக்குறாங்க….
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட answer paper கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது????….
——————————————————————————————————————–
ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப்
புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது…
——————————————————————————————————————–
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான் ஐயா.
——————————————————————————————————————–
நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…
சொல்லட்டுமா????
ஆ..சொல்லட்டுமா????
பக்கத்து “பெருமாள் கோவில்”ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….



Juli 28th, 2010 at 07:36
Nalla sevai Thodaratum
guru