Juli, 2010

வாசி வாசி – யோசி யோசி

கஷ்டத்தில் இருப்பவன் ஜோசியர் வீட்டை விட்டு வரமாட்டான் செல்வந்தன் மருந்து கடையை விட்டு வரமாட்டான்
உலகை பற்றிய அறிவை உலகை சுற்றிப்பார்த்து அறிந்தது  அந்தகாலம் அது கற்காலம்
உலகை பற்றிய அறிவை அறையில் இருந்தபடியே அறிவது இந்தகாலம் இது கணணிக்காலம்

வாழ்வின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகின்றது,
வாழ்வின் இரண்டாம் பகுதி முற்பகுதிக்காக வருந்துவதில் கழிகின்றது
சிந்தனை அற்ற மனிநர்களை பழக்கமே ஆள்கிறது
பெரியமனிதர்களுக்கு நண்பர்களை விட போற்றுவோரே அதிகமிருப்பர்
நதிகளின் பெருமை கடல் வரைதான்
கொடுத்தவனின் பெருமை கொடுத்ததை கேட்கும் வரைதான்
இனிமையாக பேசினாலும் உண்மையின்றி பேச வேண்டாம்
உண்மையாக பேசினாலும் இனிமையின்றி பேச வேண்டாம்


Counter