März, 2010

நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று

கஷ்டப் படாமல் வாழ வேண்டும் எண்பதற்காக
கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார்

நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு கட்டி நித்திரையின்றி திரிகின்றார்
படித்தால் வேலை கிடைக்கும் என்று படித்துவிட்டு வேலையின்றி திரிகின்றார்

அலங்காரமாக வாழ வென்று ஆபரணம் வாங்கி
லொக்கரில் வைத்து விட்டு அலங்காரமின்றி அலைகின்றார்

அவசர தேவைக்கு வாகனம் வாங்கி
அவசியமற்ற தேவைக்கும் பயணிக்கின்றார்

நித்திரை வந்தபோது பட்டு மெத்தையை தேடினார்
பட்டு மெத்தை வந்தது நித்திரையை தேடினார்

முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும்
முடியாமல் இருக்க செய்கின்றார்

—————————————

கராத்தையில் பிளாக் பெல்ட் வாங்கியவர் ஏன் இப்படி பயந்து ஓடுகின்றார்-
துரத்துவது நாய்

க்ரீம் பிஸ்கட்டில் க்ரீம் இருக்கும், நாய் பிஸ்கட்டில் நாய் இருக்குமா?

தங்க செயின்ன காச்சினால் தங்கம் வரும்,
சயிக்கில் செயினை காச்சினால் சைக்கில் வருமா?

14.02.2010 காதலர் தினம்

coupleராமு: அன்பே மாலா நான் உன்னை காதலிக்கிறேன்
உடனே பதில் சொல்?

மாலா: ஏன் அவசரப்படுகிரீர்கள்?

ராமு: நீ இல்லையென்று சொன்னால் உடனே
விமலாவிடம் கேட்க்க வேண்டும்

மாலா: ?!?!?!?

———–

•    காதல் கொண்ட நாய் கூட கவிதை பாட ஊளையிடும்
•    காதல் வந்தால் கழுதையும் கவி பாடும்
•    காதல் கொண்டால் மடையர்கள் விவேகிகள் ஆகுவார்கள்
விவேகிகள் மடையர்கள் ஆக்கப்படுவார்கள்

running dog

சிரித்து சிந்தியுங்கள்

Hochzeitசோமண்ணை: போன மாதம் உன்ற மகளுக்கு
கல்யாணம் நடந்திருக்கு, எனக்கு சொல்லவேயில்லை!

கந்தப்பு: அவள் எனக்கே சொல்லவில்லையே!

சோமண்ணை: !?!?!?!?

——————————————————————————–

சோமண்ணை: கலியாண மண்டபத்துக்கு
பொம்பிளை ஏன் லேட்?

கந்தப்பு: தலைமுடிக்கு டை போட்டு
முடித்து வர லேட்டா போச்சு!

சோமண்ணை: !?!?!?

——————————————————————————-

சோமண்ணை: சுந்தரத்தான் தன்ற மகன் சிக்ரட் குடிக்கிறான்
என்று கவலைப்பட்டு கதைத்தவன்.

கந்தப்பு: மகன் சிக்ரட் குடிக்கிறதை கண்டால்
தகப்பனுக்கு கவலை தானே வரும்!

சோமண்ணை: சிக்ரட் குடிக்கிறத்துக்கு
கவலைப் படவில்லை! தன்ற சிக்ரட்டை
களவெடுத்து குடிக்கிறான் என்ட கவலையாம்

கந்தப்பு: !?!?!?!?

Zigi

திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் (குறள் 926)

றங்கியவர் இறந்தவரில் வேறுபட்டவர் அல்லர்
அவ்வாறு கள் உண்டு மயங்கியவர் நஞ்சு உண்டவரே

தெருக்குறள்

படுத்தவரும் செத்தவர் போல் கிடப்பார் அது போல்
விஸ்கி, வைன், பியர் அடித்தவரும் விஷம் குடித்தவர் போல் கிடப்பார்


அகதிசூடி

குடியாதான் வாசல் குடித்தொருவன் சென்று குடி கேளாமை கோடி பெரும்
குடி குடித்தவன் குடியையும் கெடுக்கும் குடித்தவனையும் கெடுக்கும்

குடியாதான் பிறரைப்பற்றி கதைப்பான்,
குடித்தவன் தன்னைப் பற்றி, தானே கதைப்பான்

படித்தவன் வீட்டில் புத்தகம் அடுக்கப்பட்டிருக்கும்
குடித்தவன் வீட்டில் புத்தகம் சிதறிக் கிடக்கும்

Bier


Counter