September, 2009

ஒளவையாரும் அகதியாரும்

“/” = பிரித்தல்

Conversationகந்தப்பு: இவன் மணியத்தான் பள்ளிக்கூடத்தில படிக்கேக்க பிரித்தல் கணக்கு, பிரித்து எழுதுதல் போன்ற பாடங்களில் வலுகெட்டிக்கான்.

சோமண்ணை: அது அவன்ற செயல்பாட்டில் தெரியுதுதானே!

கந்தப்பு: எப்படி?

சோமண்ணை: ஒழுங்காய் நடக்கிற எல்லாத்தையும் பிரிச்சுக்கொண்டு திரிகிறான், அதிலிருந்து புரியிதுதானே!

கந்தப்பு:
!?!?!?!?!

நிலவும் வானும் போல, மலரும் மணமும் போல

சீட்டும் கழிவும் போல
மொய்யும் விழாவும் போல
அன்னதானமும் கோவிலும் போல

வட்டியும் கடனும் போல
சின்னத்திரையும் சீரியலும் போல
விஸ்கியும் கோலாவும் போல
மாணவரும் Tuitonம் போல
டான்சும் அரங்கேற்றமும் போல
கடையும் சேல்சும் போல
டெலிபோன் Cardஉம் வெட்டலும் போல
ஊடகமும் ரொக்கமும் போல
இலங்கைத் தமிழனும் அகதியும் போல
முள்வேலியும் வன்னித் தமிழனும் போல
முடியும் டையும் போல
வழுக்கையும் சீப்பும் போல
Programmம் குழப்பமும் போல
கலை விழாவும் கொத்து ரொட்டியும் போல

மணி மணி

புலமொழியும் – பழ மொழியும்

பிச்சை வேண்டாம் நாயைப்பிடி
கழிவு வேண்டாம் சீட்டைப்பிடி
வட்டி வேண்டாம் முதலைப்பிடி
மொய் வேண்டாம் விழாவைப்பிடி

விடுப்புக் குறள்

உறவோடு உறவாட விடுமுறைக்கு வருவார்
தாம் வாழ் தேச புகழ்பாடி தம்நாட்டுக்கு போவார்

உறவோடு உறவாடி கதைப்பார் முடிவில்
மன அழுத்தத்தை தந்தல்லோ நம்மைவிட்டு போவார்

மனதுக்குள் மன அழுத்தத்தில் இருப்பார்
கதைக்கையிலே மகிழ்ச்சி போல சிரித்தல்லோ கதைப்பார்

கடன்பட்டு விடுமுறையை கலகலப்பாய் கழிப்பார்
முடிவில் கடன் கேட்டு மன அழுத்தத்தை தருவார்

மகிழ்வுக்காய் விடுமுறைக்கு வருவார்- பின்னர்
சின்னத்திரை சினிமாவில் மூழ்கிப்போய்க்கிடப்பார்

தன் பிள்ளை புகழ் பாடி கதைப்பார்- அவர்
செய்கின்ற தவறுதலை கதையாலே மறைப்பார்

விடுமுறைக்கு விடுப்பு எடுத்து வருவார் இருக்கையிலே
பல விடுப்புக் கதை கதைப்பார்


Counter