Posted in கவிதைகள் on 06/24/2009 08:30 pm by Ravi Chellathuray
சொல்லுகினம் சொல்லுகினம் எதை எதையோ சொல்லுகினம்
புலம் பெயர்ந்த வாழ்கையிலே எதை எதையோ சொல்லுகினம்
கலாச்சாரம் வளர்ப்பம் என்று கதைகதையா சொல்லுகினம்
தழிழ் வளர்ப்போம், தமிழ்வளர்ப்போம் என்றல்லோ சொல்லுகினம்
தமிழோடு பிறமொழியை கலந்தல்லோ சொல்லுகினம்
ஒற்றுமையே உயர்வென்று கதை கதையாய் சொல்லுகினம்
போகவிட்டு புறஞ்சொல்லி புதுகதைகள் சொல்லுகினம்
பக்தியென்று சொல்லிச்சொல்லி பலகோவில் செல்லுகினம்
தத்துவங்கள் புரியாமல் தலைகீழாய் சொல்லுகினம்
பிறந்த தினம் பூப்புனிதம் விழாவெடுக்க சொல்லுகினம்
மொய் சேர்க்கத் தான் என்று மெய்யாக சொல்லுகினம்
வாழ்த்தவென்று வந்துவிட்டு திட்டிவிட்டு செல்லுகினம்
முகத்துக்கு முன்னாலே முகம்மலர்ந்து பேசுகினம்
தனக்கெல்லாம் தெரியுமென்று தரமின்றி பேசுகினம்
செல்லுகினம் செல்லுகினம் நாடெல்லம் செல்லுகினம்
தமக்கென்று நாடின்றி தரமின்றி வாடுகினம்
தம்மை விட்டால் ஆள் இல்லை என்றல்லோ சொல்லுகினம்
கொல்லுகினம் கொல்லுகினம் கொல்லாமல் கொல்லுகினம்
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 06/18/2009 01:00 am by Ravi Chellathuray
கந்தப்பு: கண்ட, கண்ட படி இணையதளத்தில்
எழுதுகினம் இதைப்பற்றி உன்ற கருத்து என்ன?
சோமண்ணை: ஊரில் இருக்கேக்க, கக்கூஸ்
சுவரிலும், வீட்டுமதில்களிலும் எழுதின
ஆக்களின்ட நினைவுதான் வருகுது.
கந்தப்பு:!?!?!?!?
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 06/15/2009 08:34 pm by Ravi Chellathuray

கந்தப்பு: நிலத்தில் உள்ள கோவிலுக்கும்
புலத்தில் உள்ள கோவிலுக்கும்
என்ன வித்தியாசம்?
சோமண்ணை: ஊரில் கோவில் இருக்கு
சாமியை கானம் இங்க சாமி இருக்கு
கோவிலைக் கானம்
கந்தப்பு:!?!?!?!?
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 06/14/2009 01:49 pm by Ravi Chellathuray
கந்தப்பு: புதிதாக ஆரம்பிக்க இருக்கும்
தொலைக்காட்சி, வானொலி, சஞ்சிகை
ஆகிய வற்றிற்கு ஆயுட்கால சந்தாதாரர்
தேவை எண்டு விளம்பரம் போட்டிருக்கு
பார்தனியே?
சோமண்ணை: ஓம், பார்தநான் ஆனால்
ஒரு சந்தேகம்?
கந்தப்பு: என்ன சந்தேகம?
சோமண்ணை: ஆயுட்காலம் யாருக்கு
என்பது தான்!
கந்தப்பு:!?!?!?!?
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 06/07/2009 01:07 pm by Ravi Chellathuray
சோமண்ணை: உன்னோட சண்டை போட்ட
உன்ற எதிரி செத்துப்போனான், பிறகு ஏன் கவலையோடு இருக்கிறாய்?
கந்தப்பு: நான் அதுக்காக கவலை படவில்லை!
சோமண்ணை: பிறகு எதுக்கு கவலை படுறாய்?
கந்தப்பு: சண்டை போட எதிரியில்லை எண்டுதான்!
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 06/01/2009 05:00 am by Ravi Chellathuray
சோமண்ணை: நிர்வாகத்திடம் வேலையை பிரிச்சு, 
பிரிச்சு கொடுத்தது பிழையாய்போச்சு.
கந்தப்பு: ஏன் என்ன நடந்தது.
சோமண்ணை: நிர்வாத்தை யே பிரிச்சு,
பிரிச்சு கொண்டு போட்டாங்கள்.
———————————————————————————–
தழிழுக்கும் அமுது என்று பெயர்,
அதை பேசும் தமிழனுக்கும் அகதி என்று பெயர்