Mai, 2009

மொட்டை கடிதம்

சோமண்ணை: கொம்பியூற்றரில் தமிழ் எழுத
படிச்சதால என்ன வசதி இருக்கு?

கந்தப்பு: பிடிபடாமல் மொட்டை கடிதம்
போட வசதியாய் இருக்கு.

சோமண்ணை: !?!?!?!?

சிரிங்க சிரிங்க

இடுக்கன் வருங்கால் நகுக:- சொன்னவர் திருவள்ளுவர்
துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க:- சொன்னவர் தெருவள்ளுவர்

சோமண்ணை: என்ன கந்தப்பு சிரிச்சபடி வாராய்?

கந்தப்பு: சீட்டுக்காசு 1000, வட்டிக்காசு 3000,
கடன் கொடுத்த காசு 5000, எல்லாத்தையும்
சுத்திக்கோண்டு ஓடிவிட்டான், அதுதான்
சிரிச்சுக்கொண்டு வாரன்.


சோமண்ணை: இவ்வளவு காசு போன
பிறகும் உன்னாலே எப்படி சிரிக்க முடியுது?

கந்தப்பு: சுத்திக்கொண்டு போனது என்ற
காசில்லை பக்கத்து வீட்டு பரமசிவத்தின்ட காசு!!


சோமண்ணை:
!?!?!?!


ஒளவை சொன்னதும் – அகதியார் சொன்னதும்

எவையும் போம் (ஒளவையார்)
தாயோடு அறுசுவை போம்
தந்தையோடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்
மாய வாழ்வு உற்றாருடம் போம்
உடன் பிறப்பால் தோள் வலி போம்
பொற்தாலியோடு எவையும் போம்

எல்லாம் போம் (அகதியார்)
கழிவோடு சீட்டு போம்
வட்டியோடு முதல் போம்
மொய்யோடு விழா போம்
சின்னத்திரையோடு சமையல் போம்
ரொக்கம் கேட்டதோடு ஊடகத்தொடர்பு போம்
வேலையோடு சோசல் போம்
ஆங்கிலத்தோடு தமிழ் போம்
அன்னதானத்தோடு கோவில் போம்
போம் போம் எல்லாம் போம்

வேண்டும் வேண்டும்

நாமிங்கு நலம்பெற வாழ்ந்திடல் வேண்டும்
நன்மைகள் பற்பல செய்திடல் வேண்டும்
கற்பவை கசடற கற்றிடல் வேண்டும்
ஈன்றவர் சொற்படி நடந்திடல் வேண்டும்
அனைவருக்கும் நன்மைகள் செய்திடல் வேண்டும்
இருப்பதை இல்லார்க்கு பகிர்ந்திடல் வேண்டும்
அன்புடன் பண்புடன் பழகிடல் வேண்டும்
உலகத்தை சுற்றி பார்த்திடல் வேண்டும்
முன்னேற்றம் எதுவென அறிந்திடல் வேண்டும்
அறிந்ததை அனைவருக்கும் உணர்த்திடல் வேண்டும்

சுற்றமும் சூழமும் சேர்ந்திடல் வேண்டும்
சேர்ந்தவர் அனைவரும் மகிழ்ந்திடல் வேண்டும்
அயராது உழைத்து வாழ்த்திடல் வேண்டும்
நல்லவர் போற்ற நடந்திடல் வேண்டும்
இறைவனை நம்பி வணங்குதல் வேண்டும்
தோல்வியை கண்டு தளராமை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற்றிடல் வேண்டும்
இல்லாமை இல்லாத நன்நிலை வேண்டும்
நீதியும் நேர்மையும் நிலைத்திடல் வேண்டும்
பஞ்சமும் ஏழ்மையும் ஓழிந்திடல் வேண்டும்
ஆசைகள் அளவுடன் இருந்திடல் வேண்டும்
பேராசை எல்லாம் அழிந்திடல் வேண்டும்
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வேண்டும்
தாய்மொழி பேசி மகிழ்ந்திடல் வேண்டும்
பற்பல மொழிகளும் கற்றிடல் வேண்டும்
கணணிக் கல்வி அறிந்திடல் வேண்டும்
அகில்த்து புதினங்கள் பார்த்திடல் வேண்டும்
நாட்டினை காக்க உதவிடல் வேண்டும்
வேண்டும் வேண்டும் எல்லாம் வேண்டும்
நல்லவை எல்லாம் எமக்கிங்கு வேண்டும்
வேண்டும் வேண்டும் இவையெல்லாம் வேண்டும்

சித்திரம் பேசுதடி பகுதி – 1

அன்று நிலவு வழிபாட்டு பொருள்
இன்று அதுவே விளையாட்டுப் பொருள்

 

 

 

சிரிப்பில் இத்தனை வகைகளா!

கண்ணை மட்டுமே பார்த்து சிரிப்பவன் – காரியகாரன்
கற்பனையில் சிரிப்பவன் – கவிஞன்
இடத்துக்கு ஏற்ப்ப சிரிப்பவன் – எத்தன்
காமத்தில் சிரிப்பவன் – காமுகன்
மது போதையில் சிரிப்பவன் – வெறியன்
கூட்டத்தோடு சிரிப்பவன் – சாமர்த்தியசாலி
போகுமிடம் எல்லாம் சிரிப்பவன் – கோமாளி
வாங்கும் போது மட்டும் சிரிப்பவன் – சூழ்ச்சிக்காரன்
துன்பத்திலும் சிரிப்பவன் – வேதாந்தி
இன்பத்தில் சிரிப்பவன் – மனிதன்
சிரிக்கவே சிரியாதவன் – வெங்கிடாந்தி
————————————————————————————–
நல்ல நண்பர்கள் ஆபத்தில் உதவுவார்கள்
கெட்ட நண்பர்கள் ஆபத்தை தருவார்கள்


Counter