Posted in கவிதைகள் on 03/28/2009 08:13 pm by Ravi Chellathuray
MY COUNTRY – THIS COUNTRY
our country 10 men spleeping 1 man working
this country all men working no man sleeping
our country 2 man fighting 20 men looking
this country 2 men fighting no man looking
this country all are all the time eating
our country all are one time eating
this country all are hard working
our country all are hard sleeping
Posted in தெருக்குறள் on 03/23/2009 03:52 pm by Ravi Chellathuray
லண்டன் இனிது, கனடா இனிது என்பர்
தாம் வாழும் நாட்டுமொழி அறியாதவர்
கிற்றார் இனிது கீபோர்ட் இனிது என்பர்- தம்மக்கள்
டாடி, மம்மி சொல் கேளாதவர்
லண்டன் இனிது, கனடா இனிது என்பர் – எம்மக்கள்
தம் மக்கள் நாட்டு மொழி அறியாதவர்
நட்போடு நட்பாக வாழ்வார் சிலர் – வாங்கிய பின்
ஆள் மாறி நாடு மாறிப்போவார் பலர்
கண்ட போது பல் இழித்து கலகலப்பாய் சிரிப்பார்
போக விட்டு லொல்லுக்கதை கதைப்பார்.
சின்னத்திரை நாடகங்கள் விசர் என்று கதைப்பார்
இலவசம் என்றால் குந்தியிருந்து பார்பார்.
Posted in கவிதைகள் on 03/13/2009 04:48 pm by Ravi Chellathuray
நாடின்றி வாழ்கின்ற நமக்கில்லை சிந்தனைகள்
நாடோடி வாழ்க்கையில் நமக்கேது சிந்தனைகள்
நிலையற்ற வாழ்வினிலே நிலையான சிந்தனைகள்
நமக்கில்லை அதுபோன்ற நலமான சிந்தனைகள்
பெற்றோரைக் காணாது ஏங்குகின்ற சிந்தனைகள்
உறவினரைத் தொலைத்துவிட்ட சோகத்து சிந்தனைகள்
மொழிபுரியா குளிர்நாட்டில் நடுங்குகின்ற சிந்தனைகள்
மொழிமறந்து மொழியழிந்த மழுங்குகின்ற சிந்தனைகள்
ஆனந்தம் அழிந்ததுபோல் அவலமான சிந்தனைகள்
அவலத்து வாழ்க்கையிலே கவலையான சிந்தனைகள்
இவ்வாழ்க்கை வாழ்கையிலே வந்திடுமோ சிந்தனைகள்
சிந்தனைகள் சிந்தனைகள் சோகமான சிந்தனைகள்
நலமற்ற வாழ்க்கையிலே நமக்கில்லை நற் சிந்தனைகள்