Februar, 2009

குழப்புவோம், குழம்புவோம்

சோமண்ணை: ஊரில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது படிக்காமல்
வகுப்பை குழப்பின சுந்தரத்தான் ஐரோப்பாவுக்கு வந்திட்டானாம்!
இப்ப எப்பிடி? முன்னேற்றமோ!

கந்தப்பு: ஓம், நல்ல முன்னேற்றம், ஊரில் இருக்கேக்க வகுப்பை
மட்டும்தான் குழப்பினான் இங்க வந்து பள்ளிக்கூடத்தையே குழப்புறான்.

சோமண்ணை:!?!?!?!?

பிளவுபட்டால் கொண்டாட்டம்

ஊர் பிளவுபட்டால்  கூத்தாடிக்கு கொண்டாட்டம்
கூத்தாடி பிளவுபட்டால் ரசிகனுக்கு திண்டாட்டம்
நோயாளி பிளவுபட்டால் வைத்தியருக்கு கொண்டாட்டம்
வைத்தியர்கள் பிளவுபட்டால் நோயாளிக்கு திண்டாட்டம்
நண்பர்கள் பிளவுபட்டால் எதிரிக்கு கொண்டாட்டம்
எதிரிகள் பிளவுபட்டால் சமூகத்துக்கு திண்டாட்டம்
கோவில்கள் பிளவுபட்டால் பக்தர்களுக்கு கொண்டாட்டம்
பக்தர்கள் பிளவுபட்டால் பூசாரிக்கு  திண்டாட்டம்
பத்திரிகை பிளவுபட்டால் வாசகர்க்கு கொண்டாட்டம்
வர்த்தகர்கள் பிளவுபட்டால் வாங்குவோர்க்கு கொண்டாட்டம்
வாங்குபவர் பிளவுபட்டால் வியாபாரிக்கு திண்டாட்டம்
வானொலிகள் பிளவுபட்டால் நேயர்களுக்கு கொண்டாட்டம்
நேயர்கள்  பிளவுபட்டால் அறிவிப்பாளருக்கு  திண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் பிளவுபட்டால் கொண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் விளங்காமல் திண்டாட்டம்
விளக்கங்கள் விளங்காமல் பலபேர்க்கு  கொண்டாட்டம்
பிளவுபட்டு போனதாலே சிலபேர்க்கு  திண்டாட்டம்
பிளவுபட்டு இருந்துவிட்டால் பலபேர்க்கு கொண்டாட்டம்
புலம்பெயர் நாட்டினிலே புதுமையான  கொண்டாட்டம்
பிளவுபட வைத்துவிட்டால் அதுபெரிய கொண்டாட்டம்
தமிழினம் வாழும்வரை இருக்குமிந்த கொண்டாட்டம்
தமிழினம் பிளவுபட்டால் தமிழனுக்கு கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் பிளவுபட்டால் கொண்டாட்டம்

வைரமுத்துவாக விவேக்


Counter