Dezember, 2008

வியாபார தந்திரம்

ஒருவர்: எங்கட சுந்தரம் சீட்டுப்பிடித்தான்
நட்டப்பட்டான்.உண்டியல் நடத்தினான்
நட்டப்பட்டான். கடைப்போட்டான்
நட்டப்பட்டான்.

மற்றவர்: இப்ப பிஸ்னஸ் நடக்குதாம்,
அப்படியெண்டால் என்ன பிஸ்னஸ்
செயகிறான்?

ஒருவர்: கடைக்குள்ள உண்டியலை
வைச்சு கடையை கோயிலாக்கி
போட்டானாம்

பத்திரிகை ஆசிரியரின் நிலை

ஆசிரியர் : நான் வெளியிடும் மாத பத்திரிகையை விற்று தருவீர்களா?

முதலாளி: கிலோ என்ன விலை

ஆசிரியர் : !?!?!?!

ஓடுகினம், ஓடுகினம் லண்டனுக்கு ஓடுகினம்

ஓடுகினம், ஓடுகினம் லண்டனுக்கு ஓடுகினம்
புலம் பெயர்ந்து வந்த பின்பும் லண்டனுக்கு ஓடுகினம்
ஓடுகின, ஓடுகினம் குடும்பமாக ஓடுகினம்
குட்டி போட்ட பூனை போல குடும்பமாக ஓடுகினம்
ஓடுகினம், ஓடுகினம் லண்டனுக்கு ஓடுகினம்

இங்கிலீசு படிக்கலாமாம் என்று சொல்லி ஓடுகினம்
பேற்றோல்செற்றில் வேலையென்று சொல்லி சொல்லி ஓடுகினம்
வீடு அங்க வாங்கலாமாம் என்று சொல்லி ஓடுகினம்
கடைகள் அங்கு திறக்கலாமாம் என்று சொல்லி ஓடுகினம்
ஓடுகினம், ஓடுகினம் லண்டனுக்கு ஓடுகினம்
Read the rest of this entry »

தமிழ் மொழி

தமிழ் மொழியாம் தமிழ் மொழி அது எங்கள் தாய் மொழி
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தொன்றிய
மூத்தமொழியாம் தமிழ் மொழி
உலக பொது மறையாம் திருக்குறளை இவ் உலகிற்கு
தந்த மொழியாம் தமிழ்மொழி

தமிழுக்கும் அமுதென்று பெயர் அதுவே நம்மொழியாம் தமிழ்மொழி
இயற்கை வழம்தனை காக்க சொன்ன மொழியாம் தமிழ் மொழி
நீர், நிலம், காற்று ஆகயம் நெருப்பு இவைதனை
போற்றி கவி பாடி வணங்கியதும் தாய்மொழியாம் தமிழ் மொழி
உறவுகளை இணைய வைக்க உதவும் மொழியாம் எம்மொழியாம் தமிழ் மொழி
உயிர் எழுது, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து என்று எழுத்துக்கே
உயிர் கொடுத்த மொழி தமிழ் மொழி
தமிழ் மொழியாம் தமிழ் மொழி அது எங்கள் தாய்மொழி
தமிழ் இனத்துக்கே பெருமை தேடித்தந்த மொழி தமிழ் மொழி
போற்றிடுவோம் போற்றிடுவோம் அதை போற்றி பாடிடுவோம்
தமிழ் மொழியை கவியாலே கவி பாடி நாம் இங்கு மகிழ்ந்திடுவோம்

ஒற்றுமை வேற்றுமை


ஆசிரியர்: நிலத்தில் இருக்கிற தமிழ் அகதிகளுக்கும், புலத்தில் இருக்கிற
அகதிகளுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்னவென்று சொல்லுங்கோ

மாணவன்: ஒற்றுமை – அங்கும் அகதி தான், இங்கும் அகதி தான்.
வேற்றமை – நிலத்தில் அவலப்பட்ட அகதி புலத்தில் அலங்கார அகதி.

ஆசிரியர்: நிலத்தில் இருக்கிற தமிழனுக்கும் புலத்தில் இருக்கிற
தமிழனுக்கும் உள்ள பிரச்சினை என்ன?

மாணவான்: நிலத்தில் இருக்கிற தமிழருக்கு சிங்களவரால் பிரச்சினை,
புலத்தில் இருக்கிற தமிழனுக்கு தமிழனாலேயே பிரச்சினை

கொம்பியூட்டர் பிள்ளையார்

கந்தப்பு: எங்கட சுந்தரத்தான் பிள்ளையார்
கோயிலுக்கு கொம்பியூட்டர் ஒண்டு உபயம்
செய்யப்போறானாம். கோயிலுக்கு உபயம்
செய்யிறவை- வேல், மயில், குத்துவிளக்கு
திரைச்சீலைகள்தான் குடுக்கிறவை உவன்
ஏன் கொம்பியூட்டர் கொடுக்கப்போறான்
எண்டுதான் விளங்குதில்லை அண்ண…

சோமண்ணை: பிள்ளையாரிட்டதானே ‘மவுஸ்
(எலி)” இருக்கு அதுதான் கொம்பியூட்டர் உபயம்
பண்ணப் போறான் போல கிடக்கு.

பார்த்தாலே சிரிப்பு

போலி டாக்டர்

எனக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்-
கிறகாரணத்தை டொக்டரால் கண்டுபிடிக்க
முடியவில்லை
.
உன் கணவர் என்ன சொல்லுகிறார்?
டாக்டரை மாற்ற சொல்லுகிறார்!
உன் டாக்டர் என்ன சொல்லுகிறார்?
கணவனை மாற்ற சொல்லுகிறார்.


Counter