November, 2008

அலங்கார அகதி

தமிழன்: என்னிடம் சொந்த வீடு இருக்கு. சொந்த கார் இருக்கு. பெட்டி நிறைய நகை இருக்கு. எனர கணக்கில் பாங்கில் நல்ல பணம் இருக்கு.

ஐரோப்பியர்
: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு!

தமிழன்: !?!?!?

கொலை, களவு, கற்பளிப்பு

கந்தப்பு  : ஸ்ரீலங்காவில், சிங்கள  அரசாங்கம்
சொன்னதை  கேட்டனியலே ?

சோமண்ணை : என்ன  சொன்னவை !

கந்தப்பு  : தங்கடை  அரசாங்கம்  வந்த
பின்தானாம் சிங்களப்  பகுதியிலை  கொலை

களவு, கற்பளிப்பு  எல்லாம்  குறைஞ்சு  இருக்காம்.

சோமண்ணை : கொலை, களவு, கற்பளிப்பு
செய்யிறவங்களை ஆமியிலை  சேர்த்து  தமிழ்
பகுதிக்கு  அனுப்பினால்.சிங்களப்  பகுதியிலை
அதெல்லாம்  குறையும்தானே

கந்தப்பு : !!!???

கறுப்பனின் பாட்டுக்கு வெள்ளையனின் ஆட்டம்

பாவ மன்னிப்பு

சோமண்ணை: ஏன் எங்கட ஐயர் அடிக்கடி
வேதக்கோவிலுக்கு போறார்?

கந்தப்பு: பாவ மன்னிப்பு கேட்க்கத்தான்!

சோமண்ணை: ?!?!?

புலம்பெயர் பொன்மொழிகள்

வாங்கியதை வாங்கிய நேரத்தில் வாங்கிவிட்டு
கொடுப்பதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுப்பது தான் – கைமாத்து.

வாங்கியதை வாங்கி வேண்டிய நேரத்தில் வாங்கிவிட்டு
கொடுப்பதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுக்காமல் விட்டால் அது – ஏமாத்து.

வாங்கியதை வாங்கிவிட்டு, கொடுத்தவன் கேட்டபோது எடுத்ததை
இல்லை என்றால் அது – சுத்துமாத்து.

கையில் பணம் குறைவாக இருப்பவன் விலையை பார்ப்பான்
கையில் பணம் அதிகம் இருப்பவன் தரத்தை பார்பான்
கையில் பணமே இல்லாதவன் முகட்டை முகட்டை பார்ப்பான்.

நேற்றய நண்பர்கள் இன்றய எதிரிகள்
இன்றய நண்பர்கள் நாளைய எதிரிகள்
எனவே எமது வாழ்வில் நண்பர்களை விட எதிரிகள் அதிகம்.

நல்ல நட்பை தேடிக்கொள்ள பல வருடம் போதாது
நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்

ஐரோப்பாவில் வள்ளுவர்

ஒருவர்: திருவள்ளுவர் ஐரோப்பாவுக்கு வந்தால்,
எப்படி குறள் எழுதியிருப்பார்?

மற்றவர்:
வட்டிக்கு விட்டவன் வயிறு எரிய
வாழ்வான். சீட்டுப்பிடித்தவன் சீரழிஞ்சு
போவான் என்று எழுதியிருப்பார்.

ஒருவர்: !?!?!?

தெருக்குறள் பகுதி 2

எச்சீட்டை யார் யார் கேட்டு எடுப்பினும்- தன் சீட்டை
முதல் சிட்டாய் எடுப்பதே அறிவு.

சீட்டுப் பிடிப்பார் கூட்டம் போல் ஆங்கு ஆங்கே
கழிவு கேட்டு ஏற்றி விடுவதே நட்பு.

நட்போடு நம்பும்படி பிடித்திடுவார் சீட்டு- சீட்டை
எடுத்த பின் நாடு விட்டு நாடு மாறிடுவார்.

குடியாதவரும் நல் குடிகாரறே குடித்தோர் கும்பலோடு
கும்பலாக குந்தியிருக்க பெறின்

உடுப்பை இழந்தவன் கைபோல் ஆங்கே
உடுத்ததை உறுவி செல்வதாம் நட்பு

கண்டபோது பல்இழித்து கதைப்பார்- போகவிட்டு
லொள்ளு கதை கதைத்தல்லோ சிரிப்பார்.

சீதனப் பிரச்சனை

ஒருவர்: சுவிஸ் பொம்பிளை சீதனமாய் கொண்டு
வந்த கார் என்ன விட்டு, விட்டு இழுக்குது!

மற்றவர்: வட்டிக்குவிட்டு வந்த காசில் கார்
வாங்கி கொடுத்தால், அது விட்டு, விட்டுதானே
இழுக்கும்!

ஒருவர்:!?!?!?

வயிறு எரிச்சல்

நோயாளி: எனக்கு அடிக்கடி வயிறு எரியுது டாக்டர்.

டாக்டர்: எப்ப, எப்ப வயிறு எரியுது என்று சொல்லும்.

நோயாளி: எங்கிட தமிழர் யாரும் நல்லா
வந்திட்டாங்கள் என்று கேள்விப்பட்ட உடன
வயிறு எரியுது.

டாக்டர்:
?!?!?


Counter