அன்றும் இன்றும்
Posted in கவிதைகள் on 10/30/2008 11:42 pm by Ravi Chellathurayகடன் பட்டார் கலங்கியது அன்று
கடன் கொடுத்தோர் கலங்கியது இன்று
உண்மை பேசி உயர்ந்தவர் அன்று
உண்மை பேசி தாழ்ந்தவர் இன்று
இராமர்கள் வாழ்ந்த காலங்கள் அன்று
இராவணர் வாழ்கின்ற காலங்கள் இன்று
நம்பி நடந்ததால் உயர்ந்தவர் அன்று
நம்பி நடந்ததால் தாழ்ந்தவர் இன்று
போட்டிகள் நன்மையில் முடிந்தது அன்று
போட்டிகள் பொறாமையில் முடிவது இன்று
உழைத்தவன் ஊதியம் பெற்றது அன்று
உழைக்காமல் ஊதியம் பெறுவது இன்று
தீயவர் நல்லவர் ஆனது அன்று
நல்லவர் தீயவர் ஆவது இன்று
நன்மைகள் நல்லவை நடந்தது அன்று
அன்றுபோல் இருந்தால் அதுவே நன்று


