Posted in தத்துவ வரிகள் on 08/23/2010 08:00 am by Ravi Chellathuray
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்
துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை தீமையையும் விரட்டுகிறது
அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம் இரண்டாமவள் ஒரு புதையல்
ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்
பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது
மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது
நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை
பறக்க விரும்புபவனால் படர முடியாது
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால்இ நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்
Posted in தத்துவ வரிகள் on 08/09/2010 08:15 am by Ravi Chellathuray

இனியும் வேண்டும் என்பது இளமை
இனியும் வேண்டாம் என்பது முதுமை
இனி எப்போ விடியும் என்பது இளமை
இனி ஏன் விடிகிறது என்பது முதுமை
மறக்க வேண்டாததை மறந்து விடுவது இளமை
மறக்க வேண்டியதை மறக்காமல் இருப்பது முதுமை
இனித்தான் இனிமையான வாழ்வு என்பது இளமை
இனித்தான் கசப்பான வாழ்வு என்பது முதுமை
மறைக்க வேண்டியதை மறைக்காதது இளமை
மறைக்க வேண்டியதை மறைப்பது முதுமை
வாழும் காலம் இனிமை என்பது இளமை
வாழ்ந்த காலம் இனிமை என்பது முதுமை
சில்லறை தேடி அலைய நினைப்பது இளமை
கல்லறை தேடி அலைய நினைப்பது முதுமை


Posted in தத்துவ வரிகள் on 05/31/2010 02:30 pm by Ravi Chellathuray
ஓளவையின் பாடல்
ஆலைப் பலா ஆக்கலாமோ?
அருஞ்சுணங்கள் வாலை நிமிர்க்க வசமோ?
நீலநிறக் காக்கைதனை பேசுவிக்கலாமோ
கருனையிலா மூர்க்கனை சீராக்கலாமோ?
அகதியாரின் பாடல்
வட்டியில்லா கடன் எடுக்க முடியுமோ?
கழிவில்லா சீட்டுப்பிடிக்க முடியுமோ?
மொய் கொடுக்கா விழா காண முடியுமோ?
குழப்பமில்லா விழா பார்க்க முடியுமோ?
நாடகமில்லா சின்னத்திரை இருக்க முடியுமோ?
சினிமாபாடல் இல்லா வானொலி கேட்க முடியுமோ?
ரொக்கம் இல்லா ஊடகம் தொடர முடியுமோ?
அன்னதானம் இல்லா ஆலயத்தில் பக்த்தரை காணத்தான் முடியுமோ?
கடன் கொடுக்கமால் கடை நடாத்த முடியுமோ?
கோலா கலக்கா விஸ்கி குடிக்கத்தான் முடியுமோ?
குறை கூறா உறவை தேடத்தான் முடியுமோ?
நம்பிக் கெடுக்கா நட்பை தேடத்தான் முடியுமோ?
நகை போடா பெண்ணை காணத்தான் முடியுமோ?
இரண்டு வேலை செய்யா எம்மவரை தேடத்தான் முடியுமோ?
எம்மவர் ஆக்கத்தை விலைக்கு விற்க்கத்தான் முடியுமோ?
புலம் பெயரா தமிழ்ர் இருக்கத்தான் முடியுமோ?
நம்மினத்தார் ஒற்றுமையாய் வாழத்தான் முடியுமோ?
அலுப்புத்தராத மனைவி அமையத்தான் முடியுமோ?
தன் பிள்ளையை புழுகாத தாயைத்தான் காணமுடியுமோ?
முடியுமோ முடியுமோ எமக்கு இவையெல்லாம் புலம்பெயர்வில்
முடியுமோ முடியுமோ முடியுமோ?
Posted in தத்துவ வரிகள் on 04/11/2010 11:56 am by Ravi Chellathuray
தத்துவ வரிகள்
கிராமத்து பெண்ணின் முகத்தில் புன்நகை
நகரத்து பெண்ணின் கழுத்தில் நகை
சேற்றில் நின்று நாற்று நடும்
கிராமத்து பெண்களின் பாட்டில் சேறில்லை
பசுவின் மடியில் கொசு கடித்தாலும் அது குடிப்பது பாலையல்ல
அதன் இரத்தத்தை
கோவிலில்லா ஊரில் குடியிருக்காதே
குடியிருக்கும் இடத்தில் அல்லவா கோவில் இருக்கிறது
நிலத்தில் வாழ் நம்மவர் முகத்தில் அவலங்கள்
புலத்தில் வாழ் எம்மவர் முகத்தில் அலங்காரங்கள்
நான் சிரித்த போது சிரிக்காத நட்புக்கள்
நான் அழுத போது சிரிக்கின்றது


அப்பவும் இப்பவும்
சோமண்ணை: தமிழ் ரேடியோ, தமிழ் ரீவீ பார்க்கக் கேக்க முடியவில்லை
ஏனென்றால் வாடகை வீட்டில் சட்லைட் பூட்டமுடியாது
கந்தப்பு: இப்ப நிலத்தோடு வீடு கட்டி சட்லைட் பூட்டியும் ரேடியோ,
ரீவீ பார்க்கக் கேக்க முடியவில்லை, வீட்டு கடன் அடைக்க ஓடியோடி
இரண்டு வேலை செய்வதால். பார்க்க கேக்க நேரமில்லை
சோமண்ணை: !?!??!?
Posted in ஐடியா ஐயாசாமி, தத்துவ வரிகள் on 03/01/2010 08:00 am by Ravi Chellathuray
கஷ்டப் படாமல் வாழ வேண்டும் எண்பதற்காக
கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார்
நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு கட்டி நித்திரையின்றி திரிகின்றார்
படித்தால் வேலை கிடைக்கும் என்று படித்துவிட்டு வேலையின்றி திரிகின்றார்
அலங்காரமாக வாழ வென்று ஆபரணம் வாங்கி
லொக்கரில் வைத்து விட்டு அலங்காரமின்றி அலைகின்றார்
அவசர தேவைக்கு வாகனம் வாங்கி
அவசியமற்ற தேவைக்கும் பயணிக்கின்றார்
நித்திரை வந்தபோது பட்டு மெத்தையை தேடினார்
பட்டு மெத்தை வந்தது நித்திரையை தேடினார்
முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும்
முடியாமல் இருக்க செய்கின்றார்
—————————————
கராத்தையில் பிளாக் பெல்ட் வாங்கியவர் ஏன் இப்படி பயந்து ஓடுகின்றார்-
துரத்துவது நாய்
க்ரீம் பிஸ்கட்டில் க்ரீம் இருக்கும், நாய் பிஸ்கட்டில் நாய் இருக்குமா?
தங்க செயின்ன காச்சினால் தங்கம் வரும்,
சயிக்கில் செயினை காச்சினால் சைக்கில் வருமா?

Posted in கவிதைகள், தத்துவ வரிகள் on 01/25/2010 01:00 am by Ravi Chellathuray

கடனாலே வந்த நட்பு வட்டியாலே போகும்
சீட்டாலே வந்த நட்பு கழிவோடு போகும்
விழாவாலே வந்த நட்பு மொய்யோடு போகும்
ஆலயத்தில் வந்த நட்பு அன்னதானத்தோடு போகும்
குடியாலே வந்த நட்பு வெறியோடு போகும்
கடையாலே வந்த நட்பு கடனாலே போகும்
உறவாலே வந்த நட்பு அலுப்பாலே போகும்
பயணத்தால் வந்த நட்பு பாதியிலே போகும்
இனையத்தில் வந்த நட்பு வைரஸால் போகும்
அறிவிப்பாளரோடு வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்
ரெலிபோனால் வந்த நட்பு கார்ட் வெட்டோடு போகும்
போகும் பொய்யான நட்ப்பெல்லாம் பாதியிலே பொய்யாகி போகும்
———————
நம்பி கெடுப்பவனுடன் நட்பாய் இருப்பதை விட
நம்பாமல் இருப்பவனின் நட்பு மேல்
கட்டின மாடு எட்டும் வரை மேயும்
கட்டாத மாடு ஓயும் வரை மேயும்
இழுக்கும் வரை மேய்வது கட்டின மாடு
இருக்கும் வரை மேய்வது கட்டாமாடு
Posted in தத்துவ வரிகள் on 09/16/2009 10:50 am by Ravi Chellathuray
சீட்டும் கழிவும் போல
மொய்யும் விழாவும் போல
அன்னதானமும் கோவிலும் போல
வட்டியும் கடனும் போல
சின்னத்திரையும் சீரியலும் போல
விஸ்கியும் கோலாவும் போல
மாணவரும் Tuitonம் போல
டான்சும் அரங்கேற்றமும் போல
கடையும் சேல்சும் போல
டெலிபோன் Cardஉம் வெட்டலும் போல
ஊடகமும் ரொக்கமும் போல
இலங்கைத் தமிழனும் அகதியும் போல
முள்வேலியும் வன்னித் தமிழனும் போல
முடியும் டையும் போல
வழுக்கையும் சீப்பும் போல
Programmம் குழப்பமும் போல
கலை விழாவும் கொத்து ரொட்டியும் போல
Posted in தத்துவ வரிகள் on 09/11/2009 08:50 am by Ravi Chellathuray

பிச்சை வேண்டாம் நாயைப்பிடி
கழிவு வேண்டாம் சீட்டைப்பிடி
வட்டி வேண்டாம் முதலைப்பிடி
மொய் வேண்டாம் விழாவைப்பிடி
Posted in தத்துவ வரிகள் on 05/24/2009 06:09 pm by Ravi Chellathuray
எவையும் போம் (ஒளவையார்)
தாயோடு அறுசுவை போம்
தந்தையோடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்
மாய வாழ்வு உற்றாருடம் போம்
உடன் பிறப்பால் தோள் வலி போம்
பொற்தாலியோடு எவையும் போம்
எல்லாம் போம் (அகதியார்)
கழிவோடு சீட்டு போம்
வட்டியோடு முதல் போம்
மொய்யோடு விழா போம்
சின்னத்திரையோடு சமையல் போம்
ரொக்கம் கேட்டதோடு ஊடகத்தொடர்பு போம்
வேலையோடு சோசல் போம்
ஆங்கிலத்தோடு தமிழ் போம்
அன்னதானத்தோடு கோவில் போம்
போம் போம் எல்லாம் போம்
Posted in தத்துவ வரிகள் on 05/02/2009 01:00 pm by Ravi Chellathuray
கண்ணை மட்டுமே பார்த்து சிரிப்பவன் – காரியகாரன்
கற்பனையில் சிரிப்பவன் – கவிஞன்
இடத்துக்கு ஏற்ப்ப சிரிப்பவன் – எத்தன்
காமத்தில் சிரிப்பவன் – காமுகன்
மது போதையில் சிரிப்பவன் – வெறியன்
கூட்டத்தோடு சிரிப்பவன் – சாமர்த்தியசாலி
போகுமிடம் எல்லாம் சிரிப்பவன் – கோமாளி
வாங்கும் போது மட்டும் சிரிப்பவன் – சூழ்ச்சிக்காரன்
துன்பத்திலும் சிரிப்பவன் – வேதாந்தி
இன்பத்தில் சிரிப்பவன் – மனிதன்
சிரிக்கவே சிரியாதவன் – வெங்கிடாந்தி
————————————————————————————–
நல்ல நண்பர்கள் ஆபத்தில் உதவுவார்கள்
கெட்ட நண்பர்கள் ஆபத்தை தருவார்கள்