‘கவிதைகள்’ Category

விளங்குதில்லை விளங்குதில்லை ஒண்டுமாய் விளங்குதில்லை !!!


புலம் பெயர்ந்து பெயர்ந்து புது வாழ்க்கை வாழ்கையிலே நல்லதெது கெட்டதெது ஒண்டுமாய் விளங்குதில்லை
காலை மாலை ஓடி ஓடி வேளை செய்து கலைத்துப் போய் அலுத்துப் போய் வாழ்கின்ற வாழ்க்கையிலே ஒண்டுமாய் விளங்குதில்லை
நாடுவிட்டு நாடுமாறி நாடு இழந்த வாழ்க்கையிலே உற்றமெது சுற்றமெது உன்மையான உறவு எது ஒண்டுமாய் விளங்குதில்லை
முலைக்கொரு கோவில் வந்து எந்நாளும் விழா வந்து பக்தி எது பகட்டு எது பண்பான வாழ்க்கை எது ஒண்டுமாய் விளங்குதில்லை
விட்டாலும் பிடித்தாலும் ஓடி ஓடி உழைத்தாலும் பணம் கையில் சேருதில்லை ஏனென்று ஒண்டுமாய் விளங்குதில்லை
அண்ணன் யார், தம்பி யார், அப்பன் யார், பிள்ளை யார், தாய் யார், மகள் யார், மனைவி யார், கணவன் யார் ஒண்டுமாய் விளங்குதில்லை
பாசையும் புரியுதில்லை குளிரும் பிடிக்குதில்லை நித்திரையும் வருகுதில்லை நல்ல நட்பும் இங்கில்லை ஏனென்று ஒண்டுமாய் விளங்குதில்லை
தொலைக்காட்சி, வான்அலைகள் வான் அலையில் கூடிப்போய் அதற்குள்ளும் பிரச்சனைகள் ஏனென்று ஒண்டுமாய் விளங்குதில்லை
தமிழ் வள்ர்போம் தமிழ் வளர்ப்போம் என்றெல்லோ சொல்லுகினம் கதைக்கயிலே ஆங்கில்த்தை கலந்தல்லோ பேசுகினம் ஏனென்று ஒண்டுமாய் விளங்குதில்லை
விளக்கங்கள் விளக்க இன்று எமக்கு இங்கு எவருமில்லை அதனாலே நமக்கு இன்று தெரியாமல் புரியாமல் ஒண்டுமாய் விளங்குதில்லை
விளங்குதில்லை விளங்குதில்லை ஒண்டுமாய் விளங்குதில்லை விளங்குதில்லை விளங்குதில்லை ஒண்டுமாய் விளங்குதில்லை

எது துன்பம்

நல்ல சுற்றம் சூழாத இல்வாழ்க்கை துன்பம்
கல்வி கற்காத வாழ்க்கை துன்பம், அநீதி, பாவச்செயல் புரியும் ஆட்சியின்கீழ் வாழ்தல் துன்பம்
மழைத்துளி ஒழுகும் பழைய கூரை உள்ள வீட்டில் வாழ்தல் துன்பம்
வீரம் விவேகம் இல்லாதவன் கையில் பிடித்த படைக்கருவி துன்பம்
நல்ல வாசனையில்லாத அழகிய மலர் துன்பம்
தெளிவு இல்லாதவன் செய்யும் முயற்சி துன்பம்
கவியின் பொருளை அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் கவி கூறுதல் துன்பம்
கருனை இல்லாதவரிடம் கடன் கேட்டுச் செல்லுதல் துன்பம்
கடன் கொடுத்தவர் முன் வாங்கியதை கொடுக்காமல் அவர் காணும் படி அடிக்கடி செல்லுதல் துன்பம்
துணிவு இல்லாதவர் கூறும் வீரவுரை துன்பம்
கணவனுக்கு நோய் போல் மனைவி வாழுகின்ற வீடு துன்பம்
மனைவிக்கு நோய் போல் கணவன் வாழுகின்ற வீடு துன்பம்
அனுபவிக்காமல் சேர்த்து வைக்கும் மிகுந்த செல்வம் துன்பம்
மனநிறைவு இல்லாதவரின் இணக்கம் துன்பம்
பொருந்தாத இடத்தில் திருமணம் செய்தல் துன்பம்
கொடுத்த அலவில் மகிழாதவருக்கு கொடுத்தல் துன்பம் முதுமையில் நோய் வந்து வாடுதல் துன்பம்
பிறிதோர் உயிரைக் கொண்டு அதை உண்டு தம் ஊனை வளர்த்தல் துன்பம்
அறிஞறோடு கொண்ட நட்பை நீக்கி விடுதல் துன்பம்
அன்பே இல்லாதவரிடம் தமக்கு ஏற்பட்ட துன்பங்களை கூறுதல் துன்பம்
கல்வி அறிவு உள்ளோர் சபையில் கருத்தில்லாமல் பேசுவது துன்பம்
வருமைபட்ட கெட்ட காலத்தில் கைவிட்டு போவோரது நட்பு துன்பம்
துன்பம் எதுவென்று அறிந்து நடந்தால் வாழ்வு என்றென்றும் எல்லோருக்கும் இன்பம்

பித்தளைச்சிப்பியின் – மிச்சமில்லை மிச்சமில்லை


மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
காலை, மாலை ஓடி, ஓடி வேலை செய்ய போதிலும்
மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
கடன் வாங்கி வட்டிகட்டி வாழுகின்ற போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
சோசலிலே காசெடுத்து வேலை செய்த போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
சீட்டெடுத்து வட்டிவாங்கி சேர்த்துவிட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
மொய் எடுக்க விழாவெடுத்து மொய் சேர்த்த போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
நாடுவிட்டு நாடு மாறி திரிகின்ற போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
சின்னத்திரை நாடகங்கள் இலவசமாய் பார்த்துவிட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
கோவில்குளம் அன்னதானம் உண்டு வந்த போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
கடைகள் போட்டு குடும்பமாக நடர்த்தி வந்த போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
நல்ல நண்பர் என்று சொல்லி கூடித்திரிந்த போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
இலவசமாய் சின்னத்திரை, சஞ்சிகள் வானலைகள் பார்த்து கேட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
சேல்ஸ் போட்ட கடைதனிலே சாமன் வாங்கி சேர்த்து விட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
வான் அலையில் வந்து வந்து கருத்து கேட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
கடன் எடுத்து வீடு கட்டி கார் வாங்கி வாழ்ந்து விட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே

புலம் பெயர்ந்தவர் நாங்களடா


புலம் பெயர்ந்தவர் நாங்களடா
இங்கு புலம்பி வாழ்வதும் நாங்களடா
மனம் விட்டு கதைப்பவாள் இல்லையடா – இங்கு
போக விட்டு சிரிப்பவர் தொல்லையடா

இருக்கும் போது சிரிக்கின்றார்
இல்லையென்றால் அழுகின்றார்
ஓடி ஓடி உழைக்கின்றார்
உண்மைகள் தன்னை மறைக்கின்றார்

தன்னைத் தானே புகழ்கின்றார்
பகட்டு வாழ்கை வாழ்கின்றார்
உறவுகள் தன்னை மறக்கின்றார்
நாடுகள் மாறி அலைகின்றார்

படித்தவன் போலே நடிக்கின்றார்
படைத்தவர் போலே வாழ்கின்றார்
கொடுத்தவான் கேட்டால் முறைக்கின்றார்
பண்பற்ற கதைகள் கதைக்கின்றார்

படைத்ததை எல்லாம் அழிக்கின்றார்
படித்ததை எல்லாம் கிழிக்கின்றார்
சிந்தனனை இன்றி முழிக்கின்றார்
தாய் மொழி தன்னை மறக்கின்றார்

——
தனக்காக வாழ்ந்தால் நேரம் போகாது
பிறருக்காக வாழ்ந்தால் நேரம் போதாது

மாறாது மாறாது ஒரு போதும் மாறாது


நம்மவர் கண்ணுக்கு நல்லவைகள் தெரியாது
எம்மவர் மனதுக்கு நன்மைகள் புரியாது
அவரவர் முகங்களிலே புன்னகையே கிடையாது
அந்தந்த சிரிப்புக்கு அர்த்தமே புரியாது
பேசுகின்ற வார்த்தையிலே விபரங்கள் இருக்காது
தாயகத்து நிகழ்வுகளில் நாட்டமே கிடையாது
எம்மவரின் பண்பாடு நம்மவர்க்கே புரியாது
எமக்குள்ள வேற்றுமைகள் ஒருபோதும் ஒழியாது
போகவிட்டு புறஞ்சொல்லல் ஒருநாளும் போகாது
ஓரிடத்தில் ஒழுங்காக வாழ்ந்ததுவும் கிடையாது
வந்தவரை வரவேற்க்கும் பண்புதனும் கிடையாது
பணம்சேர்க்கும் படலங்கள் நம்மைவிட்டு போகாது
பலகோடி கொடுத்தாலும் அதுகூடப் போகாது
நன்மை பல செய்தாலும் நன்றியே கிடையாது
தாய்மொழியை பேசுகின்ற நோக்கமே வராது
பொதுநலம் என்னவென்று ஒருவருக்கும் தெரியாது
எம்மினத்தை விட்டுவிட்டு இக்குணங்கள் மாறாது
மாறாது மாறாது ஒருபோதும் மாறாது
எம்மினம் என்னவென்று எம்மவர்கே புரியாது
தெரியாது, புரியாது இதுவொன்றும் மாறாது
மாறாது மாறாது என்றென்றும் மாறாது
சுடுகாடு போனாலும் சுட்டெரிந்து போனாலும்
இக்குணங்கள் எம்மைவிட்டு ஒருபோதும் மாறாது
மாறாது மாறாது ஒருபோதும் மாறாது

பாதியிலெ போகும் நட்பு

கடனாலே வந்த நட்பு வட்டியாலே போகும்
சீட்டாலே வந்த நட்பு கழிவோடு போகும்
விழாவாலே வந்த நட்பு மொய்யோடு போகும்
ஆலயத்தில் வந்த நட்பு அன்னதானத்தோடு போகும்
குடியாலே வந்த நட்பு வெறியோடு போகும்
கடையாலே வந்த நட்பு கடனாலே போகும்
உறவாலே வந்த நட்பு அலுப்பாலே போகும்
பயணத்தால் வந்த நட்பு பாதியிலே போகும்
இனையத்தில் வந்த நட்பு வைரஸால் போகும்
அறிவிப்பாளரோடு வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்
ரெலிபோனால் வந்த நட்பு கார்ட் வெட்டோடு போகும்
போகும் பொய்யான நட்ப்பெல்லாம் பாதியிலே பொய்யாகி போகும்

———————

நம்பி கெடுப்பவனுடன் நட்பாய் இருப்பதை விட
நம்பாமல் இருப்பவனின் நட்பு மேல்

கட்டின மாடு எட்டும் வரை மேயும்
கட்டாத மாடு ஓயும் வரை மேயும்

இழுக்கும் வரை மேய்வது கட்டின மாடு
இருக்கும் வரை மேய்வது கட்டாமாடு

கயவர்

நடக்காததை சொல்வர் சிறியர்
நடந்ததை சொல்வர் பெரியர்
நடக்காததை நடந்ததாக சொல்பவர் கயவர்

பார்த்ததை சொல்பவர் சிறியர்
பார்க்காமல் சொல்பவர் பெரியர்
பார்க்காததை பார்ததாக சொல்பவர் கயவர்

கேட்டுகொண்டு இடுப்பவர் சிறியர்
கேட்டபின் கேடபவர் பெரியர்
கேட்காமல் கேட்டேன் எனபவர் கயவர்

தன்னைப்பற்றி சொல்பவர் சிறியர்
தன்னைப்பற்றி சொல்லாதவர் பெரியர்
தன்னைப் பற்றியே சொல்லிக்கொண்டு இருப்பவர் கயவர்

கனக்க கதைப்பவர் சிறியர்
கனக்க கதையாதவர் பெரியர்
கனக்க கதைகட்டுபவர் கயவர்

கோமாளி

Jokerசுயநலவாதி வாழும் இடத்தில் பொதுநலவாதி கோமாளி
படியாதார் வாழும் இடத்தில் படித்தவன் கோமாளி
கதைப்பவர் வாழும் இடத்தில் கதையாதவன் கோமாளி
வாசிக்காதார் வாழும் இடத்தில் வாசிப்பவன் கோமாளி

குழப்புபவர் வாழும் இடத்தில் குழப்பாதவன் கோமாளி
குழம்புபவன் வாழும் இடத்தில் குழம்பாதவன் கோமாளி
இருப்பவன் வாழும் இடத்தில் இல்லாதவன் கோமாளி
கடன்பட்டான் வாழும் இடத்தில் கடன்படாதவன் கோமாளி
குடித்தவன் வாழும் இடத்தில் குடிக்காதவன் கோமாளி
அம்மனமாய் வாழும் இடத்தில் கோவணத்தான் கோமாளி
இல்லாதான் கூட்டத்தில் இருப்பவனோ
இருப்பவன் கூட்டத்தில் இல்லாதவனோ
இடம் பொருள் பார்த்தால் எல்லோரும் என்னாலும்
எங்கெங்கும் கோமாளி கோமாளி

சொல்லுகினம் சொல்லுகினம், கொல்லாமல் கொல்லுகினம்

சொல்லுகினம் சொல்லுகினம் எதை எதையோ சொல்லுகினம்
புலம் பெயர்ந்த வாழ்கையிலே எதை எதையோ சொல்லுகினம்
கலாச்சாரம் வளர்ப்பம் என்று கதைகதையா சொல்லுகினம்
தழிழ் வளர்ப்போம், தமிழ்வளர்ப்போம் என்றல்லோ சொல்லுகினம்
தமிழோடு பிறமொழியை கலந்தல்லோ சொல்லுகினம்
ஒற்றுமையே உயர்வென்று கதை கதையாய் சொல்லுகினம்
போகவிட்டு புறஞ்சொல்லி புதுகதைகள் சொல்லுகினம்
பக்தியென்று சொல்லிச்சொல்லி பலகோவில் செல்லுகினம்
தத்துவங்கள் புரியாமல் தலைகீழாய் சொல்லுகினம்
பிறந்த தினம் பூப்புனிதம் விழாவெடுக்க சொல்லுகினம்
மொய் சேர்க்கத் தான் என்று மெய்யாக சொல்லுகினம்
வாழ்த்தவென்று வந்துவிட்டு திட்டிவிட்டு செல்லுகினம்
முகத்துக்கு முன்னாலே முகம்மலர்ந்து பேசுகினம்
தனக்கெல்லாம் தெரியுமென்று தரமின்றி பேசுகினம்
செல்லுகினம் செல்லுகினம் நாடெல்லம் செல்லுகினம்
தமக்கென்று நாடின்றி தரமின்றி வாடுகினம்
தம்மை விட்டால் ஆள் இல்லை என்றல்லோ சொல்லுகினம்
கொல்லுகினம் கொல்லுகினம் கொல்லாமல் கொல்லுகினம்

வேண்டும் வேண்டும்

நாமிங்கு நலம்பெற வாழ்ந்திடல் வேண்டும்
நன்மைகள் பற்பல செய்திடல் வேண்டும்
கற்பவை கசடற கற்றிடல் வேண்டும்
ஈன்றவர் சொற்படி நடந்திடல் வேண்டும்
அனைவருக்கும் நன்மைகள் செய்திடல் வேண்டும்
இருப்பதை இல்லார்க்கு பகிர்ந்திடல் வேண்டும்
அன்புடன் பண்புடன் பழகிடல் வேண்டும்
உலகத்தை சுற்றி பார்த்திடல் வேண்டும்
முன்னேற்றம் எதுவென அறிந்திடல் வேண்டும்
அறிந்ததை அனைவருக்கும் உணர்த்திடல் வேண்டும்

சுற்றமும் சூழமும் சேர்ந்திடல் வேண்டும்
சேர்ந்தவர் அனைவரும் மகிழ்ந்திடல் வேண்டும்
அயராது உழைத்து வாழ்த்திடல் வேண்டும்
நல்லவர் போற்ற நடந்திடல் வேண்டும்
இறைவனை நம்பி வணங்குதல் வேண்டும்
தோல்வியை கண்டு தளராமை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற்றிடல் வேண்டும்
இல்லாமை இல்லாத நன்நிலை வேண்டும்
நீதியும் நேர்மையும் நிலைத்திடல் வேண்டும்
பஞ்சமும் ஏழ்மையும் ஓழிந்திடல் வேண்டும்
ஆசைகள் அளவுடன் இருந்திடல் வேண்டும்
பேராசை எல்லாம் அழிந்திடல் வேண்டும்
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வேண்டும்
தாய்மொழி பேசி மகிழ்ந்திடல் வேண்டும்
பற்பல மொழிகளும் கற்றிடல் வேண்டும்
கணணிக் கல்வி அறிந்திடல் வேண்டும்
அகில்த்து புதினங்கள் பார்த்திடல் வேண்டும்
நாட்டினை காக்க உதவிடல் வேண்டும்
வேண்டும் வேண்டும் எல்லாம் வேண்டும்
நல்லவை எல்லாம் எமக்கிங்கு வேண்டும்
வேண்டும் வேண்டும் இவையெல்லாம் வேண்டும்


Counter