‘ஐடியா ஐயாசாமி’ Category

நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று

கஷ்டப் படாமல் வாழ வேண்டும் எண்பதற்காக
கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார்

நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு கட்டி நித்திரையின்றி திரிகின்றார்
படித்தால் வேலை கிடைக்கும் என்று படித்துவிட்டு வேலையின்றி திரிகின்றார்

அலங்காரமாக வாழ வென்று ஆபரணம் வாங்கி
லொக்கரில் வைத்து விட்டு அலங்காரமின்றி அலைகின்றார்

அவசர தேவைக்கு வாகனம் வாங்கி
அவசியமற்ற தேவைக்கும் பயணிக்கின்றார்

நித்திரை வந்தபோது பட்டு மெத்தையை தேடினார்
பட்டு மெத்தை வந்தது நித்திரையை தேடினார்

முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும்
முடியாமல் இருக்க செய்கின்றார்

—————————————

கராத்தையில் பிளாக் பெல்ட் வாங்கியவர் ஏன் இப்படி பயந்து ஓடுகின்றார்-
துரத்துவது நாய்

க்ரீம் பிஸ்கட்டில் க்ரீம் இருக்கும், நாய் பிஸ்கட்டில் நாய் இருக்குமா?

தங்க செயின்ன காச்சினால் தங்கம் வரும்,
சயிக்கில் செயினை காச்சினால் சைக்கில் வருமா?

மிச்சமில்லை

ஐடியா ஐயா சாமியின கவிதை “புலத்தார்“

விரோதி வருசம் 2009

கந்தப்பு: 2009ஆம் ஆண்டு சித்திரை புதுவருசத்திற்கு பெயர்
விரோதி வருசமாம்,தமிழருக்கு எப்பிடியாம்?

சோமண்ணை: தமிழருக்கு அரசும், பிறநாடுகளும் தான்
விரோதியென்று பார்த்தால் இப்ப பிறந்த வருசமும் தமிழருக்கு
விரோதியாய் போச்சு.

கந்தப்பு: ?!?!?!?!

————————————————————————————————————————————–
மாடு விரும்பின இடத்தில் பட்டிகட்ட முடியாது
அகதி விரும்பின இடத்தில் அரசு அமைக்க முடியாது


Counter