Posted in தெருக்குறள் on 07/25/2010 01:54 pm by Ravi Chellathuray
கஷ்டத்தில் இருப்பவன் ஜோசியர் வீட்டை விட்டு வரமாட்டான் செல்வந்தன் மருந்து கடையை விட்டு வரமாட்டான்
உலகை பற்றிய அறிவை உலகை சுற்றிப்பார்த்து அறிந்தது அந்தகாலம் அது கற்காலம்
உலகை பற்றிய அறிவை அறையில் இருந்தபடியே அறிவது இந்தகாலம் இது கணணிக்காலம்
வாழ்வின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகின்றது,
வாழ்வின் இரண்டாம் பகுதி முற்பகுதிக்காக வருந்துவதில் கழிகின்றது
சிந்தனை அற்ற மனிநர்களை பழக்கமே ஆள்கிறது
பெரியமனிதர்களுக்கு நண்பர்களை விட போற்றுவோரே அதிகமிருப்பர்
நதிகளின் பெருமை கடல் வரைதான்
கொடுத்தவனின் பெருமை கொடுத்ததை கேட்கும் வரைதான்
இனிமையாக பேசினாலும் உண்மையின்றி பேச வேண்டாம்
உண்மையாக பேசினாலும் இனிமையின்றி பேச வேண்டாம் 
Posted in தெருக்குறள் on 06/08/2010 08:00 am by Ravi Chellathuray

அரும்புகள் எல்லாம் பூக்கள் விற்பதால் மல்லிகைபூவிலும் வியர்வை வாசம்
பிஞ்சு விரல்கள் பிழிந்ததனாலே கசப்பாய் இருக்கிறது கரும்புச்சாறு
கடற்கரை அலையை ரசிக்கமுடியவில்லை, நொண்டிச்சிறுவன் சுண்டல் விற்கயிலே
பெற்றோர் இருவரும் வேலைக்கு போக வாடகைத்தாய்யாக
9 வயதுச்சிறுமி
வாடாத கீரையை வாடிய முகத்தோடு விற்கிறால் சிறுமி, வாங்கிச்சமைத்தபின் உப்பின் கரிப்பு உறைப்பாய் எனக்கு
அப்பா வாங்கியது அதிகவிலை: அக்காவின் கணவன்
வாகனம் ஓட்டும் போது கைதொலைபேசி ஒலித்தால் எடுத்துப்பேசாதீர்கள், அலைப்பது எமனாகக்கூட இருக்கலாம்.
கடல் அலையை ரசிக்கமுடியவில்லை, சுனாமிப்பேரலை வந்து போன பின்னால்

Posted in தெருக்குறள் on 05/10/2010 07:50 am by Ravi Chellathuray
எதிரி நண்பன் ஆனால் ஆபத்து
நண்பன் எதிரி ஆனால் பேராபத்து
நல்ல நட்பு தூர இருந்தாலும் கிட்ட இருப்பது போல் இருக்கும்
கெட்ட நட்பு கிட்ட இருந்தாலும் தூர இருப்பது போல் இருக்கும்
வேலையின்றி வாழ்ந்த போது சேர்ந்த நட்பு
வேலை கிடைத்தபின் சோர்ந்த நட்பு
சொல்பவர்கள் எல்லாம், செய்பவர்கள் அல்ல
செய்பவர்கள் எல்லாம் சொல்பவர்கள் அல்ல.
சொல்லி விட்டு சொல்லவில்லை எனபவர்கள் நல்லவர்கள் அல்ல
Posted in சித்திரம் பேசுதடி, தெருக்குறள் on 02/02/2010 07:53 am by Ravi Chellathuray
திருக்குறள்
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் (குறள் 926)
உறங்கியவர் இறந்தவரில் வேறுபட்டவர் அல்லர்
அவ்வாறு கள் உண்டு மயங்கியவர் நஞ்சு உண்டவரே
தெருக்குறள்
படுத்தவரும் செத்தவர் போல் கிடப்பார் அது போல்
விஸ்கி, வைன், பியர் அடித்தவரும் விஷம் குடித்தவர் போல் கிடப்பார்
அகதிசூடி
குடியாதான் வாசல் குடித்தொருவன் சென்று குடி கேளாமை கோடி பெரும்
குடி குடித்தவன் குடியையும் கெடுக்கும் குடித்தவனையும் கெடுக்கும்
குடியாதான் பிறரைப்பற்றி கதைப்பான்,
குடித்தவன் தன்னைப் பற்றி, தானே கதைப்பான்
படித்தவன் வீட்டில் புத்தகம் அடுக்கப்பட்டிருக்கும்
குடித்தவன் வீட்டில் புத்தகம் சிதறிக் கிடக்கும்

Posted in தெருக்குறள் on 01/19/2010 07:55 am by Ravi Chellathuray



முகத்தாலே வந்த நட்பு முள்போல குத்தும்
அகத்தாலே வந்த நட்பு பூபோல மலரும்
முகத்தாலே வந்த நட்பு வாங்கும் வரை நிற்க்கும்
அகத்தாலே வந்த நட்பு வாழும் வரை தொடரும்
அந்நியரை கண்ட போது நான் அகதி என்கிறான்
நம்மவரை கண்ட போது தான் நஷநாலிற்றி என்கிறான்
சோஸலுக்கு போகும் போது கால் நடையாய் போகின்றான்
கொவிலுக்கு போகும் போது கார்பயணம் செய்கின்றான்
வாழும் நாட்டில் இருந்தால் பிச்சாதிபதி
வாழ்ந்த நாட்டுக்கு போனால் லட்சாதிபதி
Posted in தெருக்குறள் on 12/28/2009 01:00 am by Ravi Chellathuray
பாராட்டி பேசுதல் நன்று – பாராட்டியபின்
பாராட்டியவரே பாராட்டியவரை திட்டித்திரிவது நன்றன்று
திட்டித்திரிதல் நன்றன்று திட்டியபின் திட்டியவரே
திட்டியவரோடு சேர்ந்து திரிதல் நன்றன்று
மொய் கொடுத்தல் நன்று – கொடுத்தபின்
மொய்க்காக விழா எடுத்தல் நன்றன்று
கொடுத்தோரை வாழ்த்துவது நன்று
வாங்கியபின் கொடுத்தோரை ஏய்த்து திரிவது நன்றன்று
ஆக்கம் இல்லையேல் நிகழ்ச்சி இல்லை அஃது போல்
ரொக்க இல்லையேல் ஊடகம் இல்லை
படி, படி படிப்பதை படிக்க படித்தபின்
படித்தபடி நடக்க அதற்கு தக
உழைக்க உழைக்க உடல்வலுவுக்கு ஏற்ப உழைக்க – அஃது போல்
செலவு செய்க வரவுக்கு ஏற்ப்ப
வரவுக்கு ஏற்ற வாழ்கை வாழ்வாரே வாழ்வார் அஃதிலார்
வரவிழந்து மனம் நொந்து வீழ்வார்
Posted in தெருக்குறள் on 10/12/2009 09:55 am by Ravi Chellathuray
எள்ளெண்ணெய் எரிக்கிறார்கள்
சனீஸ்வரர்களே – சனீஸ்வரனுக்கு
சனீஸ்வரனுக்கு எள்ளெண்ணெய் எரிக்கபோனேன்
எனக்கு முன்னே என் எதிரியே எரித்துக்கொண்டிருந்தான்
எள்ளெண்ணெய் எரித்தபின் திரும்பி பார்த்தால்
எதிரியே எரிக்க காத்திருந்தான்
எள்ளெண்ணெய்திரியை எரித்து ஆலயத்தில் புகையை நிறப்புவதை விட
அகத்திலுள்ள பகையை எரித்து அன்பை நிறப்புங்கள்
நல் எண்ணத்துக்கு விளக்கேற்றுங்கள்
தீய எண்ணத்திற்கு எரியூட்டுங்கள்
கேட்கிறார்கள் ஈஸ்வரனை வா என்று
எரிக்கிறார்கள் சனீஸ்வரனை போவென்று
சனிக்கு சனியோடு எரிக்க போகிறார்கள் – பக்கத்தில் மனைவியோடு
தெருக்குறள்
எள்ளெண்ணெய் எரித்தலிலும் பெரிது
நல்லெண்ணத்தில் எரித்தல்