Author: Ravi Chellathuray
கந்தப்பு: வர, வர உடம்பு வீக்காய் போச்சு
சோமண்ணை: ஏன்?
கந்தப்பு: முன்பு ஒரு போத்தல் விஸ்கி
குடித்தாலும் அசையமாட்டன்
சோமண்ணை: அப்ப இப்ப?
கந்தப்பு: வெறும் விஸ்கி போத்தலை
கண்டவுடனேயே ஆட்டம் துவங்கி விடுகிது
சோமண்ணை: !?!?!?
Author: Ravi Chellathuray

கந்தப்பு: இப்படி தெரிஞ்சிருந்தா,
அந்த கோவிலுக்கு போயிருக்க மாட்டன்
சோமண்ணை: ஏன் கோவில் பூட்டோ?
கந்தப்பு: அட நீ வேற அங்க இருந்த
தெல்லாம் பழய செருப்பும், சப்பாத்தும் தான்
சோமண்ணை: !?!?!?
———————–
சோமண்ணை: அடிக்கடி கோவிலுக்கு போய் வாரவரிடம்
தானத்தில் சிறந்த தானம் எது என்று கேட்டது தப்பா போச்சு!
கந்தப்பு: ஏன் என்ன சொல்கிறார்?
சோமண்ணை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறார்
கந்தப்பு: !?!?!?
————————
கோவில் வந்ததும் உண்டியல் வந்ததா?
உண்டியல் வந்ததும் கோவில் வந்ததா?
அம்மன் எழுந்து ஓடியது
போலிச் சாமியாரை கண்டபோது
————————
Author: Ravi Chellathuray
கஷ்டப் படாமல் வாழ வேண்டும் எண்பதற்காக
கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார்
நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு கட்டி நித்திரையின்றி திரிகின்றார்
படித்தால் வேலை கிடைக்கும் என்று படித்துவிட்டு வேலையின்றி திரிகின்றார்
அலங்காரமாக வாழ வென்று ஆபரணம் வாங்கி
லொக்கரில் வைத்து விட்டு அலங்காரமின்றி அலைகின்றார்
அவசர தேவைக்கு வாகனம் வாங்கி
அவசியமற்ற தேவைக்கும் பயணிக்கின்றார்
நித்திரை வந்தபோது பட்டு மெத்தையை தேடினார்
பட்டு மெத்தை வந்தது நித்திரையை தேடினார்
முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும்
முடியாமல் இருக்க செய்கின்றார்
—————————————
கராத்தையில் பிளாக் பெல்ட் வாங்கியவர் ஏன் இப்படி பயந்து ஓடுகின்றார்-
துரத்துவது நாய்
க்ரீம் பிஸ்கட்டில் க்ரீம் இருக்கும், நாய் பிஸ்கட்டில் நாய் இருக்குமா?
தங்க செயின்ன காச்சினால் தங்கம் வரும்,
சயிக்கில் செயினை காச்சினால் சைக்கில் வருமா?

Author: Ravi Chellathuray
ராமு: அன்பே மாலா நான் உன்னை காதலிக்கிறேன்
உடனே பதில் சொல்?
மாலா: ஏன் அவசரப்படுகிரீர்கள்?
ராமு: நீ இல்லையென்று சொன்னால் உடனே
விமலாவிடம் கேட்க்க வேண்டும்
மாலா: ?!?!?!?
———–
• காதல் கொண்ட நாய் கூட கவிதை பாட ஊளையிடும்
• காதல் வந்தால் கழுதையும் கவி பாடும்
• காதல் கொண்டால் மடையர்கள் விவேகிகள் ஆகுவார்கள்
விவேகிகள் மடையர்கள் ஆக்கப்படுவார்கள்

Author: Ravi Chellathuray
சோமண்ணை: போன மாதம் உன்ற மகளுக்கு
கல்யாணம் நடந்திருக்கு, எனக்கு சொல்லவேயில்லை!
கந்தப்பு: அவள் எனக்கே சொல்லவில்லையே!
சோமண்ணை: !?!?!?!?
——————————————————————————–
சோமண்ணை: கலியாண மண்டபத்துக்கு
பொம்பிளை ஏன் லேட்?
கந்தப்பு: தலைமுடிக்கு டை போட்டு
முடித்து வர லேட்டா போச்சு!
சோமண்ணை: !?!?!?
——————————————————————————-
சோமண்ணை: சுந்தரத்தான் தன்ற மகன் சிக்ரட் குடிக்கிறான்
என்று கவலைப்பட்டு கதைத்தவன்.
கந்தப்பு: மகன் சிக்ரட் குடிக்கிறதை கண்டால்
தகப்பனுக்கு கவலை தானே வரும்!
சோமண்ணை: சிக்ரட் குடிக்கிறத்துக்கு
கவலைப் படவில்லை! தன்ற சிக்ரட்டை
களவெடுத்து குடிக்கிறான் என்ட கவலையாம்
கந்தப்பு: !?!?!?!?

Author: Ravi Chellathuray
திருக்குறள்
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் (குறள் 926)
உறங்கியவர் இறந்தவரில் வேறுபட்டவர் அல்லர்
அவ்வாறு கள் உண்டு மயங்கியவர் நஞ்சு உண்டவரே
தெருக்குறள்
படுத்தவரும் செத்தவர் போல் கிடப்பார் அது போல்
விஸ்கி, வைன், பியர் அடித்தவரும் விஷம் குடித்தவர் போல் கிடப்பார்
அகதிசூடி
குடியாதான் வாசல் குடித்தொருவன் சென்று குடி கேளாமை கோடி பெரும்
குடி குடித்தவன் குடியையும் கெடுக்கும் குடித்தவனையும் கெடுக்கும்
குடியாதான் பிறரைப்பற்றி கதைப்பான்,
குடித்தவன் தன்னைப் பற்றி, தானே கதைப்பான்
படித்தவன் வீட்டில் புத்தகம் அடுக்கப்பட்டிருக்கும்
குடித்தவன் வீட்டில் புத்தகம் சிதறிக் கிடக்கும்

Author: Ravi Chellathuray

கடனாலே வந்த நட்பு வட்டியாலே போகும்
சீட்டாலே வந்த நட்பு கழிவோடு போகும்
விழாவாலே வந்த நட்பு மொய்யோடு போகும்
ஆலயத்தில் வந்த நட்பு அன்னதானத்தோடு போகும்
குடியாலே வந்த நட்பு வெறியோடு போகும்
கடையாலே வந்த நட்பு கடனாலே போகும்
உறவாலே வந்த நட்பு அலுப்பாலே போகும்
பயணத்தால் வந்த நட்பு பாதியிலே போகும்
இனையத்தில் வந்த நட்பு வைரஸால் போகும்
அறிவிப்பாளரோடு வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்
ரெலிபோனால் வந்த நட்பு கார்ட் வெட்டோடு போகும்
போகும் பொய்யான நட்ப்பெல்லாம் பாதியிலே பொய்யாகி போகும்
———————
நம்பி கெடுப்பவனுடன் நட்பாய் இருப்பதை விட
நம்பாமல் இருப்பவனின் நட்பு மேல்
கட்டின மாடு எட்டும் வரை மேயும்
கட்டாத மாடு ஓயும் வரை மேயும்
இழுக்கும் வரை மேய்வது கட்டின மாடு
இருக்கும் வரை மேய்வது கட்டாமாடு
Author: Ravi Chellathuray



முகத்தாலே வந்த நட்பு முள்போல குத்தும்
அகத்தாலே வந்த நட்பு பூபோல மலரும்
முகத்தாலே வந்த நட்பு வாங்கும் வரை நிற்க்கும்
அகத்தாலே வந்த நட்பு வாழும் வரை தொடரும்
அந்நியரை கண்ட போது நான் அகதி என்கிறான்
நம்மவரை கண்ட போது தான் நஷநாலிற்றி என்கிறான்
சோஸலுக்கு போகும் போது கால் நடையாய் போகின்றான்
கொவிலுக்கு போகும் போது கார்பயணம் செய்கின்றான்
வாழும் நாட்டில் இருந்தால் பிச்சாதிபதி
வாழ்ந்த நாட்டுக்கு போனால் லட்சாதிபதி
Author: Ravi Chellathuray

சோமு: ஊரில கொட்டில் வீட்டில இருந்த சின்னத்துரையன் ஐரோப்பாவுக்கு
வந்து காணி வாங்கி வீடுகட்டி குடி புகுந்திட்டானாம்! கேள்விப்பட்டனியே!
கந்தப்பு: ஓம், ஓம் கேள்விப்பட்டனான், அதோட வேற பிளானும் இருக்காம்.
சோமு: வேற என்ன பிளானாம்?
கந்தப்பு: வாங்கின வழவுக்க கிணறும் வெட்டி, பின் வழவுக்க கக்கூஸ்
கட்ட போறானாம். அதோட வேற பிளானும் ஒண்டு இருக்காம்.
சோமு: அது என்ன வேற பிளான்?
கந்தப்பு: ஊரில் இருந்த பனை ஓலை இறக்கி வழவுக்கு வேலி
அடைக்கப் போறானாம்.
சோமு: பிளான் இல்லாம வெளிகிட்டு இப்ப நல்ல பிளானாத் தான்
இருக்கிறான் எண்டு சொல்லுறாய்.
——————————————————
PLAN போட்டு வாழ்வாரே வாழவார், மற்றெல்லாம்
PLAN இன்றி பின் நின்று கதைப்பார்
கட்டிய வீட்டுக்கு இட்ட பெயர் அன்னை இல்லம்
அன்னை இருக்கும் இடமோ அகதி இல்லம்